ADDED : பிப் 11, 2024 01:19 AM
திண்டுக்கல்: இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் தென்மண்டல அமைப்பு ஹைதரபாத்தில் நிதி நல்கையுடன் திண்டுக்கல் ஜி.டி.என்.,கலைக்கல்லுாரியில் பொருளாதாரத்துறை சார்பில் சமூக அறிவியல் நவீன ஆராய்ச்சி,புள்ளி விவர ஆய்வு முறைகள் எனும் தலைப்பில் 3 நாட்கள் தேசிய அளவிலான பயிலரங்கம் நடந்தது. பயிலரங்க தலைவர் பேராசிரியர் ரவிச்சந்திரன் வரவேற்றார். துணை ஒருங்கிணைப்பாளர் சுஜாதா விளக்கி பேசினார். கல்லுாரி முதல்வர் பாலகுருசாமி தலைமை வகித்தார்.
கல்லுாரி செயலர் ரெத்தினம்,இயக்குநர் துரை ரெத்தினம், பொன்னையா பேசினர். ஆலோசகர் ராமசாமி,பேராசிரியர் மோகனசுந்தரம் பயிற்சியளித்தார். பரமசிவம்,ஜேக்கப் பங்கேற்றனர். இணை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர் அருண் செய்தார்.