/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ முருங்கை விலை உயர்வு கிலோ ரூ.60க்கு விற்பனை முருங்கை விலை உயர்வு கிலோ ரூ.60க்கு விற்பனை
முருங்கை விலை உயர்வு கிலோ ரூ.60க்கு விற்பனை
முருங்கை விலை உயர்வு கிலோ ரூ.60க்கு விற்பனை
முருங்கை விலை உயர்வு கிலோ ரூ.60க்கு விற்பனை
ADDED : ஜூன் 19, 2025 10:42 PM
ஒட்டன்சத்திரம்:வரத்து குறைவு காரணமாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை இரண்டே நாட்களில் கிலோவுக்கு ரூ.21 அதிகரித்து ரூ.60 க்கு விற்பனை ஆனது.
திண்டுக்கல்மாவட்டம் ஒட்டன்சத்திரம், மார்க்கம்பட்டி, இடையகோட்டை, கள்ளிமந்தையம் உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் முருங்கை அதிகமாக பயிரிடப்படுகிறது. மழை , பலத்த காற்று காரணமாக பூக்கள் உதிர்ந்ததால் மார்க்கெட்டுக்கு வரத்து குறைநத்து . இதனால் நேற்று முன்தினம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இதன் விலை திடீரென அதிகரித்து கிலோ ரூ.39 லிருந்து ரூ.50 க்கு விற்பனை ஆனது. நேற்று வரத்து மேலும் குறைந்ததால் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு கொள்முதல் செய்தனர். இதன் காரணமாக விலை மேலும் அதிகரித்து கிலோ ரூ.60 க்கு விற்பனையானது.
கமிஷன் கடை உரிமையாளர் மூர்த்தி கூறுகையில் மழை, காற்றால் முருங்கை செடிகளில் இருந்த பூக்கள் உதிர்ந்து விட்ட நிலையில் வரத்து மிகவும் குறைந்தது. தேவை கூடியதால் விலை அதிகரித்துள்ளது ''என்றார்