/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அனைவருக்கும் சொந்த வீடு அமைச்சர் பெரியசாமி பெருமிதம் அனைவருக்கும் சொந்த வீடு அமைச்சர் பெரியசாமி பெருமிதம்
அனைவருக்கும் சொந்த வீடு அமைச்சர் பெரியசாமி பெருமிதம்
அனைவருக்கும் சொந்த வீடு அமைச்சர் பெரியசாமி பெருமிதம்
அனைவருக்கும் சொந்த வீடு அமைச்சர் பெரியசாமி பெருமிதம்
ADDED : ஜூன் 15, 2025 06:46 AM

ரெட்டியார்சத்திரம்: ''அனைவருக்கும் சொந்த வீடு என்ற சூழல் உருவாகி வருவதாக'' அமைச்சர்பெரியசாமி பேசினார்.
முத்தனம்பட்டி தனியார் கல்லுாரியில் நடந்த ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 397 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்ட பணி உத்தரவு வழங்கும் விழாவில்
நல உதவிகளை வழங்கிய அவர் பேசியதாவது: தமிழகத்தில் வேலை உறுதி திட்டம், கல்விக்கான நிதியை மத்திய அரசு நிறுத்திய போதும் அவற்றை முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து தொய்வின்றி செயல்படுத்தி வருகிறார்.
அ.தி.மு.க., ஆட்சியில் ஒரு ஒன்றியத்திற்கு 20 முதல் 30 வீடுகள் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்பட்டது. அதற்கான நிதியும் தாமதமாக வழங்கப்பட்டது. தற்போது ஆண்டுதோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டுவதற்கான பணி உத்தரவு வழங்கப்பட்டு வருவதால் அனைவருக்கும் சொந்த வீடு என்ற சூழல் உருவாகி வருகிறது. இதுதவிர தார் ரோடு, தெருவிளக்கு, சமுதாயக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
முதல்வர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க., ஆட்சியின் போது பண மதிப்பு மட்டும் பார்க்காமல் மக்களின் வாழ்வாதாரம் என்ற கோணத்தில் திட்டங்களை நிறைவேற்றினார் என்றார்.
ஆர்.டி.ஓ., சக்திவேல் தலைமை வகித்தார். சச்சிதானந்தம் எம்.பி., முன்னிலை வகித்தார்.
ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர்கள் சிவகுருசாமி, சத்தியமூர்த்தி, பி.டி.ஓ., மலரவன், சத்திதா பயனாளிக்கு பங்கேற்றனர்.