/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ விரைவில் 20 லட்சம்‛ லேப் டாப் அமைச்சர் சக்கரபாணி விரைவில் 20 லட்சம்‛ லேப் டாப் அமைச்சர் சக்கரபாணி
விரைவில் 20 லட்சம்‛ லேப் டாப் அமைச்சர் சக்கரபாணி
விரைவில் 20 லட்சம்‛ லேப் டாப் அமைச்சர் சக்கரபாணி
விரைவில் 20 லட்சம்‛ லேப் டாப் அமைச்சர் சக்கரபாணி
ADDED : செப் 03, 2025 07:27 AM
எரியோடு : ''மாணவர்களுக்கு விரைவில் 20 லட்சம் லேப் டாப்' வழங்கப்பட உள்ளதாக'' உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
எரியோடு பண்ணைப்பட்டியில் ரூ. 1.43 கோடி மதிப்பிலான திருமண மண்டபம் அடிக்கல் நாட்டு விழாவில் அவர் பேசியதாவது: கரூரில் காவிரி, அமராவதி ஆறுகள் இணையும் இடத்திலிருந்து நீர் எடுத்து வேடசந்துார், ஒட்டன்சத்திரம், நத்தம், ஆத்துார், திண்டுக்கல் தொகுதிகளில் உள்ள குளங்களுக்கு நீர் கொண்டு வர ரூ. ஒரு கோடி மதிப்பில் 'சர்வே' நடந்துள்ளது. விரைவில் மாணவர்களுக்கு 20 லட்சம் லேப் டாப்' வழங்கப்பட உள்ளது என்றார்.
எம்.எல்.ஏ., காந்திராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி கார்த்திகேயன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் கவிதா, வீரா சாமிநாதன், சுப்பையன், நகர செயலாளர்கள் செந்தில்குமார், கணேசன், கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர் பங்கேற்றனர்.