Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/செய்தி சில வரிகளில்...

செய்தி சில வரிகளில்...

செய்தி சில வரிகளில்...

செய்தி சில வரிகளில்...

ADDED : ஜன 05, 2024 04:30 AM


Google News
சாயப்பட்டறைகளுக்கு நோட்டீஸ்

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் சாயப்பட்டறை கழிவுகள் திறந்தவெளியில் விடுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக புகார்கள் வந்த நிலையில், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் திவ்யா,சுகாதார மேற்பார்வையாளர் சிங்கராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மேட்டுப்பட்டி, மொட்டனம்பட்டி, சந்தைப்பேட்டை உள்ளிட்ட பகுதி சாயப்பட்டறைகளில் ஆய்வு செய்தனர். சாயப்பட்டறை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.

நத்தம் ஒன்றிய கூட்டம் -

நத்தம்: நத்தம் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன் தலைமையில் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் விஜயசந்திரிகா, சுமதி,ஒன்றிய துணை த்தலைவர் முத்தையா முன்னிலை வகித்தனர். அறிக்கையை இளநிலை உதவியாளர் கருப்பணபிள்ளை வாசித்தார். வரவு, செலவு கணக்குகள் உட்பட 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அலுவலக மேலாளர் சாந்தி தேவி நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 96 மாத காலமாக வழங்காத பஞ்சப்படியை வழங்க வேண்டும். பணியாளர்கள் பற்றாக்குறையை போக்கி புதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். வாரிசு அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் நாகல்நகரில் சி.ஐ.டி.யு.,தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மண்டல தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ராமநாதன்,ஓய்வுபெற்றோர் நல அமைப்பு கஸ்பார் ராஜ் பங்கேற்றனர்.

ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

செம்பட்டி: வட்டார அளவிலான முன்னுரிமை, ஊதிய முரண்பாட்டை களைதல், சி.பி.எஸ்., திட்ட ஒழிப்பு, தேர்தல் வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆத்துார் வட்டார கல்வி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார் பொறுப்பாளர்கள் ராமு, சவேரியார், பாலகிருஷ்ணன் பேசினர். வட்டார பொருளாளர் எட்வர்ட் பிரேம்குமார் நன்றி கூறினார்.

கூட்டுறவு சங்கம் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பயணப்படி,பஞ்சப்படியை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் அர்சத் அப்துல்லா தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் கண்ணன் பங்கேற்றனர்.

சிறை பணியில் சேர அழைப்பு

திண்டுக்கல்: மதுரை மத்திய சிறை கட்டுப்பாட்டிலுள்ள திண்டுக்கல் மாவட்ட சிறை, கொடைக்கானல் கிளை சிறையில் தலா ஒரு துாய்மை பணியாளர் பணியிடம் காலியாக உள்ளது. 2023 ஜூலை 1 அன்று 18 வயது நிறைவடைந்தவராகவும், அதிகபட்சமாக பொது-32, பி.சி., எம்.பி.சி., 34, எஸ்.சி, எஸ்.டி, எஸ்.சி.ஏ., 37 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். முன்னாள் வீரருக்கு வயது வரம்பு இல்லை. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். தகுதியுடையோர் கல்வி, சாதி, பிற சான்று நகல்களுடன் சிறை கண்காணிப்பாளர், மத்திய சிறை, மதுரை - -16 முகவரிக்கு ஜன.25க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us