ADDED : செப் 29, 2025 04:47 AM
திண்டுக்கல் : வாசவி கிளப், வனிதா கிளப், ஆரோக்கிய பாரதி அமைப்பு சார்பில் திண்டுக்கல் வாசவி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இலவச மருத்துவமுகாம் நடந்தது.
ஆரோக்கிய பாரதியின் மாநில அமைப்பு செயலாளர் சந்திரசேகரன், வாசவி கிளப் தலைவர் ரமேஷ் ஆகியோர் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தனர். ஆயுர்வேதம், நேச்சுரோபதி, சித்தா மருத்துவ முறைகளில் பயனாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் வாசவி கிளப் செயலர் பத்மநாபன், டாக்டர்கள் சிவசுப்பிரமணியம், கார்த்திகேயன், ராகவன், ஜெயபாரதி, பாலமுருகன், தேவராஜ் கலந்துக்கொண்டனர்.


