/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/நத்தம் மலை பகுதிகளில் முகமூடி நபர்கள்; போலீசார் ரோந்துநத்தம் மலை பகுதிகளில் முகமூடி நபர்கள்; போலீசார் ரோந்து
நத்தம் மலை பகுதிகளில் முகமூடி நபர்கள்; போலீசார் ரோந்து
நத்தம் மலை பகுதிகளில் முகமூடி நபர்கள்; போலீசார் ரோந்து
நத்தம் மலை பகுதிகளில் முகமூடி நபர்கள்; போலீசார் ரோந்து
ADDED : ஜன 07, 2024 07:03 AM
நத்தம்: நத்தம் அருகே மலை பகுதிகளில் முகமூடி நபர்கள் நடமாட்டம் இருப்பதால் 50க்கு மேற்பட்ட போலீசார், பொதுமக்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
நத்தம் அருகே எட்டையம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி பகுதிகளில் மொட்டைமலை அமைந்துள்ளது.
இந்த மலைப்பகுதியில் முகமூடி அணிந்த நபர்கள் நடமாடி வருவதாகவும், பகல் இரவு நேரங்களில் வரும் பெண்களை மட்டும் மிரட்டுவதாகவும் புகார்கள் வந்தது. அதன்படி எஸ்பி., பிரதீப் உத்தரவுப்படி டி.எஸ்.பி., உதயக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, எஸ்.ஐ., விஜயபாண்டியன், ஜெய்கணேஷ் உள்ளிட்ட 50-க்கு மேற்பட்ட போலீசார் ,அப்பகுதி மக்களுடன் மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். நாய்களுடன் 5 குழுக்களாக பிரிந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.