/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை
ADDED : ஜூன் 25, 2025 01:50 AM
திண்டுக்கல்:திண்டுக்கல் வடமதுரை மோர்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மதன் 23. இவர் 2024ல் சிறுமியை கடத்திச்சென்று குழந்தை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மதனை கைது செய்தனர். திண்டுக்கல் விரைவு மகிளா கோர்ட்டில் இவ்வழக்கு விசாரணை நடந்தது.
மதனுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜரானார். இந்தாண்டு இதுவரை 33 போக்சோ வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.