/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது
ADDED : ஜூன் 11, 2025 02:41 AM

திண்டுக்கல்:அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.10.97 லட்சம் வாங்கி மோசடி செய்தவரை திண்டுக்கல் போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்தவர் பி.காம் பட்டதாரி செந்தில்குமார். அரசு வேலைக்கு முயற்சி செய்தார். 2024ல் சென்னையில் வசித்த சதீஷ்குமார் 38, செந்தில்குமாருக்கு அறிமுகமானார். தமிழக நீர்வளத்துறையில் பல அதிகாரிகளை தெரியும், திருச்சியில் 'டேட்டா அனலிஸ்ட்' வேலை வாங்கி தருகிறேன் என கூறி, ரூ.10.97 லட்சத்தை வங்கிக்கணக்கு மூலமாக பெற்றுள்ளார். ஆனால் கூறிய படி வேலை வாங்கித்தரவில்லை.
பண மோசடி செய்யப்பட்டதை அறிந்த செந்தில்குமார் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். சதீஷ்குமாரை இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி கைது செய்தார். விசாரணையில் சதீஷ்குமார் ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் என்பதும் 5 ஆண்டுகளாக பல்வேறு ஊர்களில் அரசு வேலை வாங்கித்தருவதாக பலரை ஏமாற்றி பணம் பறித்ததும் தெரியவந்தது.