/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சட்டசபை தேர்தலுக்கு பின் உள்ளாட்சி தேர்தல் அமைச்சர் பெரியசாமி தகவல் சட்டசபை தேர்தலுக்கு பின் உள்ளாட்சி தேர்தல் அமைச்சர் பெரியசாமி தகவல்
சட்டசபை தேர்தலுக்கு பின் உள்ளாட்சி தேர்தல் அமைச்சர் பெரியசாமி தகவல்
சட்டசபை தேர்தலுக்கு பின் உள்ளாட்சி தேர்தல் அமைச்சர் பெரியசாமி தகவல்
சட்டசபை தேர்தலுக்கு பின் உள்ளாட்சி தேர்தல் அமைச்சர் பெரியசாமி தகவல்
ADDED : செப் 12, 2025 04:32 AM
செம்பட்டி: சட்டசபை தேர்தலுக்கு பின் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.
ஆத்துார் வீரக்கல்லில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நல உதவிகளை வழங்கிய அவர் கூறியதாவது தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிகளில் 99 சதவீதம் நிறைவேற்றப்பட்டு விட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் 6 கல்லுாரிகள் கொண்டுவரப்பட்டு உள்ளது. கூட்டுறவு கலைக்கல்லுாரி, ரெட்டியார்சத்திரம் அரசு கலைக்கல்லுாரிக்கான புதிய கட்டடங்கள், விரைவில் திறக்கப்பட உள்ளது.
நீர்வளத்துறை சார்பில் ஏரிகள், குளங்களுக்கு சிமென்ட் வாய்க்கால் அமைக்கப்பட்டது. அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர், ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கு யாரும் போட்டி கிடையாது. சட்டசபை தேர்தலுக்குப் பின் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்றார்.தாசில்தார் முத்துமுருகன் தலைமை வகித்தார்.
இது போல் வடக்கு மேட்டுப்பட்டியில் சமுதாயக்கூடம், தெற்கு மேட்டுப்பட்டியில் தார் ரோடு பணிகளுக்கு பூமி பூஜையை அமைச்சர் பெரியசாமி துவக்கி வைத்தார்.
முன்னதாக வடக்கு மேட்டுப்பட்டியில் சமுதாயக்கூடம், தெற்கு மேட்டுப்பட்டியில் தார் ரோடு பணிகளுக்கு பூமி பூஜையில் பங்கேற்று துவக்கி வைத்தார்.