ADDED : ஜன 01, 2024 06:00 AM
திண்டுக்கல்; திண்டுக்கல் இலக்கியக்களம் சார்பில் ஆங்கில புத்தாண்டை புத்தகங்களுடன் கொண்டாடுவோம் நிகழ்ச்சி தலைவர் மனோகரன் தலைமையில் நடந்தது.
செயலாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். புலவர் கோவிந்தராஜ் வரவேற்றார். ஆர்.டி.ஓ., கமலகண்ணன், பொருளாளர் மணிவண்ணன் வாழ்த்தினர். கவிஞர் சுசீலாமேரி, ஆசிரியர் ஜெயராமன் பேசினர். துணை தலைவர் சரவணன் ஏற்பாடுகளை செய்தார். நிர்வாகி அரங்கபெருமாள் நன்றி கூறினார். புத்தக பதிப்பகங்களின் விலை தள்ளுபடி நேரடி விற்பனை ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருந்தது.