ADDED : செப் 11, 2025 06:54 AM
பழநி : கொடைக்கானலில் -நண்பர் தலையில் கல்லை போட்டு கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பழநி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
கொடைக்கானல் நேதாஜி நகர் எம்.எம் .தெருவை சேர்ந்தவர் விஸ்வலிங்கம் 50. இவரது நண்பர் பாம்பார்புரத்தை சேர்ந்த ஆரிப்ஜான் 41. 2020 ஜன.,22 இரவு குடிபோதையில் இருவர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் விஸ்வலிங்கம் ஆரிப்ஜானை பீர் பாட்டிலால் தாக்க ஆரிப் ஜான் விஸ்வலிங்கத்தை கீழே தள்ளி தலையில் கல்லை போட்டு கொலை செய்தார்.
இது குறித்த வழக்கு பழநியில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.ஆரிப்ஜானுக்கு ஆயுள் தண்டனை, ரூ.பத்தாயிரம் அபராதம் விதித்து நீதிபதி மலர்விழி தீர்ப்பளித்தார்.