ADDED : ஜன 04, 2024 02:53 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் வேலுநாச்சியார் ஆண்டு பிறந்தநாள்,வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். பொது செயலாளர் காளிதாஸ் முன்னிலை வகித்தார். மாநகர செயற்குழு உறுப்பினர் சுந்தரமகாலிங்கம் வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நவரத்தினம் பேசினார். மாநகர மன்ற பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். நிர்வாகிகள் பத்மனாபன், முருகேசன், அஜித்குமார், சங்கரன், ஏழுமலை, சின்னமாரிமுத்து,சரவணன்,கோஹர்சா, நல்லமணி,அழகேந்திரன்,பழனியப்பன், அருணகிரி பங்கேற்றனர். காமராஜர்,சிவாஜி பேரவை மாவட்ட நிறுவனர் வைரவேல் ஏற்பாடுகளை செய்தார்.