/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ரூ.2.40 கோடியில் ஆய்வகம்: அமைச்சர் உத்தரவுரூ.2.40 கோடியில் ஆய்வகம்: அமைச்சர் உத்தரவு
ரூ.2.40 கோடியில் ஆய்வகம்: அமைச்சர் உத்தரவு
ரூ.2.40 கோடியில் ஆய்வகம்: அமைச்சர் உத்தரவு
ரூ.2.40 கோடியில் ஆய்வகம்: அமைச்சர் உத்தரவு
ADDED : ஜன 29, 2024 06:13 AM
கன்னிவாடி: கன்னிவாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆய்வக வசதியுடன் கட்டடம் கட்ட அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவிட்டுள்ளார்.
கன்னிவாடி பேரூராட்சி நவாப்பட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இங்கு வேலை உறுதித்திட்ட பயனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கல் நடந்தது.
இதில் பங்கேற்ற அமைச்சரிடம் பள்ளி மாணவிகள் சார்பில் கூடுதல் வகுப்பறை, ஆய்வக வசதி அமைக்க கோரினர்.
கோரிக்கையை விரைவில் நிறைவேற்றுவதாக அமைச்சர் உறுதி அளித்தார்.
தற்போது இதனை நிறைவேற்ற அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆய்வக வசதியுடன் கூடிய புதிய வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
சமீபத்தில் எம்.எல்.ஏ., நிதி மூலம் இப்பகுதியில் 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் அமைக்க உத்தரவிடப்பட்டு அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.