ADDED : பிப் 12, 2024 05:38 AM

வேடசந்துார்: வேடசந்துாரில் கொங்கு வேளாள கவுண்டர்கள் சார்பில் நடக்கும் பாரம்பரிய நிகழ்ச்சியான கும்மியாட்டம் நடந்தது. ஏராளமான பெண்கள் பங்கேற்று ஆடினர்.
வேடசந்துார் எம்.பி., மஹாலில் நடந்த கும்மி ஆட்டத்தில் வேடசந்துார், காசிபாளையம், கல்வார்பட்டி உள்ளிட்ட 30-க்கு மேற்பட்ட கிராமங்களிலிருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே கலர் சீருடையில் கும்மி ஆட்டத்தை ஆடினர். இக்கும்மியாட்டம் இங்கு நடப்பது புதிது என்பதால் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று கண்டு களித்தனர். கும்மியாட்டம் நிகழ்ச்சியை கும்மி ஆசிரியர் தாரணி, துணை ஆசிரியர் புஷ்பராஜ், பயிற்சி ஆசிரியர் செல்லமுத்து,வேடசந்துார் ஒருங்கிணைப்பாளர் காசிநாதன் செய்தனர்.