/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆட்சி அதிகாரத்தில் பங்கு தான் புதிய தமிழகத்தின் கொள்கை சொல்கிறார் கிருஷ்ணசாமி ஆட்சி அதிகாரத்தில் பங்கு தான் புதிய தமிழகத்தின் கொள்கை சொல்கிறார் கிருஷ்ணசாமி
ஆட்சி அதிகாரத்தில் பங்கு தான் புதிய தமிழகத்தின் கொள்கை சொல்கிறார் கிருஷ்ணசாமி
ஆட்சி அதிகாரத்தில் பங்கு தான் புதிய தமிழகத்தின் கொள்கை சொல்கிறார் கிருஷ்ணசாமி
ஆட்சி அதிகாரத்தில் பங்கு தான் புதிய தமிழகத்தின் கொள்கை சொல்கிறார் கிருஷ்ணசாமி
ADDED : செப் 19, 2025 03:18 AM
திண்டுக்கல்:''2026 சட்டசபை தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதுதான் புதிய தமிழகத்தின் கொள்கை'' என, அக்கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:
தியாகிகளின் பெயர்களில் ஜாதி, மதங்களை யாரும் பிரதிபலிக்கக்கூடாது. ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தான் அதிகமாக ஜாதியை துாண்டக்கூடியவர்களாக பிரிவினை பேசக்கூடிய வகையில் நடந்து கொள்கிறார்கள்.
அவர்கள் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். நான்கரை ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில் மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க முடியாத அரசால் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமின் மூலம் 4 மாதத்தில் எப்படி தீர்க்க முடியும்.
கடைசி நேரத்தில் அரசு அதிகாரிகளை கசக்கி பிழிவதன் மூலம் மிகப்பெரிய சாதனைகளை படைக்கமுடியாது.அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாயை வலது கையில் வாங்கி இடது கையால் டாஸ்மாக் செல்லும் நிலை உள்ளது.
மதுவால் ஒரு தலைமுறையே அழிந்துபோகும் நிலை இருக்கிறது.
2026 சட்டசபை தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதுதான் புதிய தமிழகத்தின் கொள்கை.
கட்சியின் 7வது மாநில மாநாடு அடுத்தாண்டு ஜன. 7ல் மதுரையில் நடக்கிறது. அதில் அரசியல் நிலைப்பாடு, கூட்டணி நிலைப்பாடு குறித்து தெரிவிப்போம்.
த.வெ.க., புதிதாக அரசியல் களத்திற்குள் நுழைந்திருக்கிறது. அக்கட்சியையும் கருத்தில் கொண்டு எங்களின் அரசியல் கணக்கு இருக்கும் என்றார்.