/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ நான்கு ஆண்டு காலத்தில் வளர்ச்சி நோக்கி கொடைக்கானல் நான்கு ஆண்டு காலத்தில் வளர்ச்சி நோக்கி கொடைக்கானல்
நான்கு ஆண்டு காலத்தில் வளர்ச்சி நோக்கி கொடைக்கானல்
நான்கு ஆண்டு காலத்தில் வளர்ச்சி நோக்கி கொடைக்கானல்
நான்கு ஆண்டு காலத்தில் வளர்ச்சி நோக்கி கொடைக்கானல்
ADDED : மே 24, 2025 03:28 AM
கொடைக்கானல் நகராட்சியில் பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் முயற்சியின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. பல வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.
இலவசமாக ஏரிச்சாலையில் லேசர் கண்காட்சி நடைபெறுகிறது. அத்துடன் பாராசூட் சவாரி உள்ளூர் மக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் மகிழ்வித்துள்ளது. நகராட்சியின் மூலமாக நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏரியை சுற்றி பல கோடி ரூபாய் செலவில் அபிவிருத்தி திட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஏரியின் உட்புறத்தில் அந்நிய களைச் செடிகள் முற்றிலும் அகற்றப்பட்டு புதிய பொலிவுடன் காட்சி அளிக்கிறது.
ஏரியை சுற்றி 68 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை கண்காணிக்க நான்கு இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு ஏரி முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளது. 50 படுக்கையுடன் வட்டார சுகாதார மையம் ஆனந்தகிரி நான்காவது தெருவில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு 24 மணி நேரமும் டாக்டர்கள் கண்காணிப்பில் உள்ளனர்.
கவி தியாகராஜர் சாலை அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கு குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளதுடன் வாகனம் நிறுத்தும் இடத்துடன் நவீன வாரச்சந்தை அமைக்கப்பட்டு வருகிறது.
கே.ஆர்.ஆர். கலையரங்கம் பகுதியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்காக திட்ட மதிப்பீடு, அறிக்கைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 400 ஆண்டுகள் சாலை வசதி இல்லாத வெள்ள கவி கிராமத்திற்கு 24 கோடி ரூபாய் செலவில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாதனை வரும் ஆண்டுகளிலும் தொடரும்.