Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/தரிசு நிலமாக மாறும் 'கொடை' தலைப்பட்டி குளம்

தரிசு நிலமாக மாறும் 'கொடை' தலைப்பட்டி குளம்

தரிசு நிலமாக மாறும் 'கொடை' தலைப்பட்டி குளம்

தரிசு நிலமாக மாறும் 'கொடை' தலைப்பட்டி குளம்

ADDED : பிப் 24, 2024 04:44 AM


Google News
Latest Tamil News
கொடைக்கானல் : கொடைக்கானல் மன்னவனுார் ஊராட்சி கும்பூர் கிராமத்தில் உள்ள தலைப்பட்டி குளத்தில் தண்ணீர் தேங்காததால் 500க்கு மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக உருமாறி உள்ளன.

கும்பூர் தலைப்பட்டி குளம் ஆதிகாலத்தில் முன்னோர்களால் கட்டமைக்கப்பட்டது. 5 ஏக்கரில் உள்ள இந்தகுளம் மூலம் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. இதன் நீர் பிடிப்பு பகுதியாக வெங்கி கொம்பு வண்ணாத்தி ஒடை உள்ளது.

துவக்கத்தில் மண் கொண்டு கரைகள் அமைக்கப்பட்டு தண்ணீர் சேமித்து பயன்பாட்டில் இருந்தது. நாளடைவில் இவை சேதம் அடைந்து தண்ணீர் தேக்க முடியாத நிலை ஏற்பட்டது. 2019ம் ஆண்டு குடிமராமத்து பணியில் ரூ 10 லட்சத்தில் குளம் துார்வாரப்பட்டு மேம்பாட்டு பணி செய்யப்பட்டன.

இப்பணிகள் முறையாக செய்யப்படாதது, தரமற்ற பணியால் தண்ணீர் தேங்காமல் வெறும் தரிசு நிலமாக காட்சி தருகிறது . இக்குளத்தை நம்பியுள்ள 500 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் வானம் பார்த்த பூமியாகி பருவ மழை காலங்களில் மட்டும் விவசாயம் செய்து கோடை காலத்தில் இவை தரிசு நிலங்களாக காட்சியளிக்கின்றன.

தரமற்ற பணியால் பாதிப்பு


ரகுபதி, விவசாயி: துவக்கத்தில் இந்த குளத்தின் கட்டுமான பணிகள் கம்பீரமாக இருந்த நிலை மாறி சேதம் அடைந்தது. குடிமராமத்து பணியில் ரூ. 10 லட்சத்தில் தரமற்ற பணி செய்யப்பட்டதால் இவற்றில் பருவமழை காலங்களில் கூட தண்ணீர் தேக்க வைக்க முடியாத அவலம் உள்ளது.

இக்குளத்தில் தண்ணீர் தேங்காத மர்மம் குறித்து நீரியியல் துறை வல்லுநர்கள் ஆய்வு செய்து தண்ணீர் தேக்க வழி ஏற்படுத்தி, விவசாய நிலங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கை எடுங்க


மகுடேஷ்வரன், விவசாயி: 5 ஏக்கர் கொண்ட தலைப்பட்டி குளத்தில் பருவ மழை காலங்களில் கூட தண்ணீர் தேங்கி நிற்பதில்லை.

வறண்ட பூமியாக காட்சி அளித்து கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக உள்ளது. சுற்றிலும் புதர் மண்டி உள்ளது. இந்தகுளத்தை மீண்டும் சீரமைத்து விவசாய பாசன வசதி வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆய்வுக்கு உட்படுத்தலாம்


பாலு, விவசாயி: குடிமராமத்து பணியில் ரூ.10 லட்சத்தில் கண் துடைப்பாக நடந்துள்ள இப் பணி குறித்து அதிகாரிகள் ஒப்பந்ததாரர், பணிகளை கண்காணித்த அதிகாரிகளின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீண்டும் குளத்தின் மேம்பாட்டு பணிகளை செப்பனிட வேண்டும். கொடைக்கானல் மலை பகுதியில் குடிமராமத்து பணியில் நடந்துள்ள குளங்களின் பணி குறித்து அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us