Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கந்தகோட்டம் தண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிேஷகம் 

கந்தகோட்டம் தண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிேஷகம் 

கந்தகோட்டம் தண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிேஷகம் 

கந்தகோட்டம் தண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிேஷகம் 

ADDED : செப் 05, 2025 02:36 AM


Google News
Latest Tamil News
திண்டுக்கல்:திண்டுக்கல் கந்தகோட்டம் தண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஹிந்து அறநிலைத்துறை கீழ் இயங்கும் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர், அபிராமி அம்மன் கோயிலின் உபகோயிலான மலைக்கோட்டை அடிவாரம் கந்தக்கோட்டம் அபிராமி அம்மன் நந்தவனம் பகுதியில் அமைந்துள்ளது பழமையான தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயில் கும்பாபிேஷகம் செப்.2ல் யாக பூஜையுடன் தொடங்கியது.

நேற்று முன்தினம் இரண்டாம் கால யாக பூஜை, கலசங்கள் நிறுவுதல், சுவாமி சிலை மருந்து சாட்டுதல் நடைபெற்றது. இதைதொடர்ந்து நேற்று காலை ஐந்தாம் கால யாக பூஜையுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது.

சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க பக்தர்களின் அரோகரா கோஷங்களுடன் பல்வேறு தீர்த்த ஸ்தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீர் கலசங்களின் மீது ஊற்ற கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதன் பின் மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்ய பூஜைகள் நடத்தப்பட்டன.

திண்டுக்கல் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

செந்தில்குமார் எம்.எல்.ஏ., திண்டுக்கல் மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா ,ஸ்ரீவாசவி தங்கமாளிகை என்.ரவி, ஸ்ரீசரண், டாக்டர் இ.என்.பி. கல்விக்குழும தலைவர் இ.என்.பழனிச்சாமி, அக்யுதா நீட் கோச்சிங் மைய செயலர்கள் மங்கள்ராம், காயத்ரி மங்கள்ராம், ஜி.டி.என்., கல்விக்குழும தலைவர் ரத்தினம், இயக்குனர் துரை, ஸ்ரீவேலவன் டிரேடர்ஸ் லட்சுமணன், ஆர்.கே.டெக்கரேட்டர்ஸ் கே.வேலு, கிங் செராமிக்ஸ் எம்.பரிமளா பங்கேற்றனர். கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us