Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மரங்களால் இயற்கையை காக்கும் கலாம் அறக்கட்டளை

மரங்களால் இயற்கையை காக்கும் கலாம் அறக்கட்டளை

மரங்களால் இயற்கையை காக்கும் கலாம் அறக்கட்டளை

மரங்களால் இயற்கையை காக்கும் கலாம் அறக்கட்டளை

ADDED : மே 16, 2025 03:37 AM


Google News
Latest Tamil News
போலீஸ் ஸ்டேஷன், கோயில் வளாகங்கள், ரோட்டோரங்கள், பள்ளி, கல்லுாரிகள், பொது இடங்களில் மரக் கன்றுகளை நடவு செய்து நத்தம் சுற்றுப்பகுதிகளை பாதுகாக்கின்றனர் கார்மென்ட்ஸ் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனம் , டாக்டர் ஏ.பி.ஜே., கலாம் கனவு அறக்கட்டளை நிறுவனத்தினர்.

கரந்தமலை, சிறுமலை, அழகர்கோவில் மலை, கடவூர் மலை என மலைகள் சூழ்ந்து இயற்கை எழில் கொஞ்சும் நகராக நத்தம் உள்ளது.

இயற்கைக்கு பஞ்ச மில்லாத இப்பகுதியில் கே.அய்யாபட்டி கார்மென்ட்ஸ் நிர்வாகத்தினர் , டாக்டர் ஏ.பி.ஜே., கலாம் கனவு அறக்கட்டளை நண்பர் குழுவில் உள்ள தன்னார்வ இளைஞர்கள் கோயில், போலீஸ் ஸ்டேஷன் வளாகங்கள், இல்ல சுப நிகழ்ச்சிகளில் மரக்கன்றுகள் வழங்குவது, பள்ளிகள் தோறும் மரக்கன்றுகள் கொடுத்து மாணவர்களிடையே மரக்கன்று நடும் பழக்கத்தை உருவாக்குவதுடன், பல்லாயிரம் மரக்கன்றுகளை நட்டு இயற்கைக்கு மேலும் மெருகூட்டுகின்றனர்.

தொழிலாளர் தினம், தீபாவளி, பொங்கல் ,தொழிலாளர்களின் இல்ல விழாக்களிலும் பலன் தரும் , நிழல் தரும் மரக்கன்றுகளை வழங்கி இயற்கையை வளர்க்க பெரும்பங்கு வகிக்கின்றனர்.

மக்களுக்கு மரக்கன்றுகள்


எஸ்.பிரபா, நிர்வாக இயக்குனர், தனியார் நிறுவனம் , கே.அய்யாபட்டி- நத்தம்: சுற்றுச்சூழலை காக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு முக்கியமான நாட்களுக்கும் எங்கள் நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளர்களுக்கும், பொது மக்களுக்கும் மரக்கன்றுகளை இலவசமாக வழங்குகிறோம்.

இதுவரை ஏறக்குறைய 1000 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறோம். நிறுவனத்தில் உருவாகும் குப்பையை தரம் பிரித்து மறுசுழற்சி செய்து பூமி வெப்பமயமாக்கலை தடுக்க முயற்சி எடுக்கிறோம். மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைத்து தண்ணீர் சிக்கனத்தையும் கடை பிடிக்கப்படுகிறது.

மலைக்காடுகள் உருவாக்குகிறோம்


கி.சசிகுமார், தலைவர், கலாம் அறக்கட்டளை, கே.அய்யாபட்டி:அறக்கட்டளை தன்னார்வலர்கள் இணைந்து தண்ணீர் பிரச்னையை முற்றிலும் தீர்ப்பதற்காகவும் இயற்கையே மீட்டெடுப்பதற்காகவும் நீர்நிலைகளில் பனை விதை , பழமை வாய்ந்த மரங்கள் நட்டு மலைக்காடுகள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அறக்கட்டளை சார்பாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் , சுய உதவிக் குழுக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். இலவச மரக்கன்றுகள் வேண்டும் என்பவர்கள் எங்களது அறக்கட்டளை தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us