ADDED : பிப் 11, 2024 01:21 AM
திண்டுக்கல்: ஜாக்டோ ஜியோ சார்பில் போராட்ட ஆயத்த மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.
திண்டுக்கல் பிச்சாண்டி மஹாலில் நடைபெற்ற கூட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முபாரக் அலி, தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் ராஜாக்கிளி தலைமை வகித்தனர். ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளரும் தலைமைச் செயலக சங்க மாநில தலைவருமான வெங்கடேசன் பேசினார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திபிப்.15ல் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவும், பிப்.26 முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடவும் தீர்மானிக்கப்பட்டது.