Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பச்சை நிறமாக மாறும் சாக்கடையால் பரவும் தொற்று

பச்சை நிறமாக மாறும் சாக்கடையால் பரவும் தொற்று

பச்சை நிறமாக மாறும் சாக்கடையால் பரவும் தொற்று

பச்சை நிறமாக மாறும் சாக்கடையால் பரவும் தொற்று

ADDED : ஜன 08, 2025 05:37 AM


Google News
Latest Tamil News
நடுரோட்டில் அடிக்குழாய் : திண்டுக்கல் சுண்ணாம்பு காளவாசல் நகரில் நடுரோட்டில் உள்ள அடிக்குழாய் சேதமடைந்து கிடப்பதால் விபத்து அபாயம் உள்ளது. துருப்பிடித்து வீணாகி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள அடிக்குழாயை அகற்ற வேண்டும்.

--சாமிநாதன், திண்டுக்கல்.

மூடாத பள்ளத்தால் விபத்து : பழநி நகராட்சி 20 வது வார்டு காந்தி ரோட்டில் சாக்கடையை துார்வார தோண்டப்பட்ட பள்ளம் இரண்டு மாதங்களாக மூடால் அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

-சேக்,பழநி.

--------வரட்டாற்றில் குப்பை

மாரம்பாடி வரட்டாற்றில் குப்பை கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது .சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. தொற்று நோய் வாய்ப்பு உள்ளதால் குப்பையை உடனுக்குடன் அகற்றி அங்கு கொட்டாமல் தடுக்க நடவடிக்கை வேண்டும்.

-அ.சந்திரசேகர், மாரம்பாடி.

எரியாத விளக்குகள் : ஒட்டன்சத்திரம் அருகே அரசபிள்ளைபட்டி பைபாஸ் சாலையில் உயிர் கோபுர மின்விளக்கு இரவு நேரத்தில் எரிவதில்லை. வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர் .விபத்து நடப்பதால் மின் விளக்கை சரி செய்ய வேண்டும். -கி.ரங்கசாமி, கம்பளிநாயக்கன்பட்டி.

ஓடையில் கழிவு நீர் தேக்கம் : ஒட்டன்சத்திரம் பழநி ரோட்டில் இருந்து தும்மிச்சம்பட்டி செல்லும் ஓடையில் கழிவு நீர் நீண்ட நாட்களாக தேங்கி பச்சை நிறமாக மாறி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. ஓடையை துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும். -

-சிவக்குமார்,ஒட்டன்சத்திரம்.

சேதமான ரோடு :

கோபால்பட்டி அருகே செடிப்பட்டி செல்லும் ரோடு சேதமடைந்து வாகனங்கள் செல்ல தகுதியற்ற நிலையில் உள்ளது. இதில் பயணிக்கும் மாணவர்கள் , கர்ப்பிணிகள் மிகுந்த சிரமத்தை அனுபவிக்கின்றனர். சாலையை புதுப்பிக்க வேண்டும்.

-கே.பாண்டி, செடிப்பட்டி.

சாக்கடையில் விழும் காலணிகள்

பழநி திருஆவினன்குடி கோயில் அருகே பக்தர்கள் விட்டு செல்லும் காலணிகள் சாக்கடையில் விழுவதால் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது . இங்கு இலவசமாக காலணிகள் வைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். முகமது, பழநி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us