/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/தனியாக செல்வோரை மறித்து வழிப்பறி அதிகரிப்பு : போயே போச்சு போலீசார் ரோந்து பணி தனியாக செல்வோரை மறித்து வழிப்பறி அதிகரிப்பு : போயே போச்சு போலீசார் ரோந்து பணி
தனியாக செல்வோரை மறித்து வழிப்பறி அதிகரிப்பு : போயே போச்சு போலீசார் ரோந்து பணி
தனியாக செல்வோரை மறித்து வழிப்பறி அதிகரிப்பு : போயே போச்சு போலீசார் ரோந்து பணி
தனியாக செல்வோரை மறித்து வழிப்பறி அதிகரிப்பு : போயே போச்சு போலீசார் ரோந்து பணி
ADDED : ஜூலை 11, 2024 06:16 AM

மாவட்டத்தில் பழநி,கொடைக்கானல்,சிறுமலை என சுற்றுலா தளங்கள் உள்ளன. இங்கு செல்வதற்காக எந்நேரமும் வெளி மாவட்டம்,மாநிலங்களை சேர்ந்த மக்கள் திண்டுக்கல்,வத்தலக்குண்டு,ஒட்டன்சத்திரம் பகுதிகளுக்கு வருகின்றனர். இதனால் எப்போதும் பைபாஸ் பகுதி ,நகர் பகுதிகளில் கூட்டமாகவே இருக்கும்
. பஸ் ஸ்டாண்ட்களிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். ஆனால் போலீசார் ரோந்து பணி என்பது அறவே இல்லை . போலீசாரை காண்பதே அரிதாக உள்ளது. இதை பயன்படுத்தி மர்ம நபர்கள் பகல்,இரவு நேரங்களில் தனியாக நடந்து,டூவீலர்களில் செல்வோரை குறிவைத்து வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதுமட்டுமில்லாமல் தனியாக செல்வோரை அடித்து துன்புறுத்தி நகை பறிக்கும் சம்பவங்களும் அதிகரித்த வண்ணமாக உள்ளது. ஆள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபடும் கொள்ளையர்களை அக்கம்பக்கத்தினரே பிடித்து போலீசில் ஒப்படைக்கின்றனர். ஆள் இல்லாமல் இருக்கும் பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபடும் கொள்ளையர்கள் எந்த பயமும் இல்லாமல் ஹாயாக சுற்றித்திரிகின்றனர். அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என பிளான் போட்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.
இரவு நேரங்களில் பஸ் ஸ்டாண்ட்,ரயில்வே ஸ்டேஷன் போன்ற முக்கிய பகுதிகளில் போலீசார் எந்நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கா போலீஸ் பூத்கள் செயல்பாட்டில் உள்ளது. இங்கேயும் போலீசார் இல்லாமல் போலீஸ் பூத்கள் காத்து வாங்குகிறது. தொடர்ந்து நடக்கும் வழிப்பறி சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மாவட்ட நிர்வாகமும் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.