ADDED : பிப் 12, 2024 05:33 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் ஸ்ரீகார்த்திக் ரெசிடென்சி ஏசி ஹால் திறப்பு விழா நடந்தது.
உரிமையாளர்கள் கருப்புசாமி , ராஜரத்தினம் குடும்பத்தினர் வரவேற்றனர். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். தி.மு.க., அவைத்தலைவர் மோகன், துணைச் செயலாளர் ராஜாமணி, நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, மாநில மாணவரணி துணைச் செயலாளர் பொன்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், இளைஞரணி செயலாளர் துணை அமைப்பாளர் பாண்டியராஜன், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி, நகராட்சி தலைவர் திருமலைசாமி, டாக்டர்கள் ராஜேந்திரன், ஆசைத்தம்பி, சிவக்குமார், சக்திவேல், முத்துசாமி,சதீஷ், நாச்சிமுத்து பங்கேற்றனர். ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோட்டில் ஸ்ரீகார்த்திக் தியேட்டர் அருகே அமைந்த இந்த ரெசிடென்சியில் பார்க்கிங் வசதி, ஏசி அறைகள், ஏசி மீட்டிங் ஹால், 24 மணி நேர வெந்நீர் வசதி, டிரைவர்களுக்கு இலவச அறை, இலவச வைபை வசதி உள்ளது.