/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/சின்னாளபட்டியில் கைத்தறி நெசவு பூங்கா முதற்கட்டமாக 45 தறிகளை கொண்டு துவக்க ஏற்பாடுசின்னாளபட்டியில் கைத்தறி நெசவு பூங்கா முதற்கட்டமாக 45 தறிகளை கொண்டு துவக்க ஏற்பாடு
சின்னாளபட்டியில் கைத்தறி நெசவு பூங்கா முதற்கட்டமாக 45 தறிகளை கொண்டு துவக்க ஏற்பாடு
சின்னாளபட்டியில் கைத்தறி நெசவு பூங்கா முதற்கட்டமாக 45 தறிகளை கொண்டு துவக்க ஏற்பாடு
சின்னாளபட்டியில் கைத்தறி நெசவு பூங்கா முதற்கட்டமாக 45 தறிகளை கொண்டு துவக்க ஏற்பாடு
ADDED : ஜன 04, 2024 02:49 AM
சின்னாளபட்டி,: கைத்தறி, துணி நுால் துறை சார்பில் சின்னாளபட்டியில் கைத்தறி நெசவு பூங்கா அமைக்க ஏற்பாடு நடக்கிறது.
சின்னாளபட்டியில் பல்வேறு நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. பெரும்பாலான சங்கங்களில் நவீன ரக கோரா வகை பட்டு, சுங்குடி, காட்டன் சேலை உற்பத்தி நடக்கிறது. இதை தொடர்ந்து சின்னாளபட்டி பூஞ்சோலை பகுதிதிருமண மண்டப கட்டடத்தில் நெசவு பூங்கா துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக கைத்தறி துணி நுால் துறை உயர் அதிகாரிகள் பார்வையிட்டு சென்றனர்.
45 கைத்தறிகள் அமைக்கப்பட்டு காஞ்சிபுரம், தாராசுரம், இளம்பிள்ளை, போச்சம்பள்ளி, கோராப்பட்டு உள்ளிட்ட பட்டு,உயர் கைத்தறி ரகங்களை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதன் மூலம் தொழிலாளர்களுக்கு முழுமையாக கூலி பெறும் வாய்ப்பு கிடைக்கும்.இதோடு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நெசவாளர்களுக்கான கூலியை பட்டுவாடா செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது.