/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அய்யலுாரில் ரூ.3 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை * பக்ரீத் பண்டிகையால் 'விறுவிறு' அய்யலுாரில் ரூ.3 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை * பக்ரீத் பண்டிகையால் 'விறுவிறு'
அய்யலுாரில் ரூ.3 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை * பக்ரீத் பண்டிகையால் 'விறுவிறு'
அய்யலுாரில் ரூ.3 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை * பக்ரீத் பண்டிகையால் 'விறுவிறு'
அய்யலுாரில் ரூ.3 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை * பக்ரீத் பண்டிகையால் 'விறுவிறு'
ADDED : மே 30, 2025 01:43 AM

வடமதுரை:பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார் வாரச்சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை ரூ.3 கோடிக்கு நடந்தது.
இங்கு வியாழன்தோறும் கூடும் வாரச்சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை அதிகளவில் நடக்கிறது. ஜூன் 7 'பக்ரீத்' பண்டிகை என்பதால் இஸ்ஸாமியர்கள் அதிகளவில் ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம். அதன்படி பண்டிகைக்காக நேற்று ஆயிரக்கணக்கில் ஆடுகள் விற்பனைக்கு வந்தன.
அதிகாலை 4:00 மணிக்கு துவங்கிய வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து காலை 9:00 மணிக்கே முடிந்தது. சந்தை வளாகத்தில் இடம் போதாமல் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டிலும் விற்பனை நடந்ததால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. பக்ரீத் பண்டிக்கைக்காக செம்மறி ஆடுகளின் வரத்தும், விலையும் அதிகமாக இருந்தது. சந்தையில் ரூ.3 கோடி அளவிற்கு விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.