Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கொடைக்கானல் மலைப் பகுதியில் ஜெலட்டின், டெட்டனேட்டர்கள்: மூவர் கைது

கொடைக்கானல் மலைப் பகுதியில் ஜெலட்டின், டெட்டனேட்டர்கள்: மூவர் கைது

கொடைக்கானல் மலைப் பகுதியில் ஜெலட்டின், டெட்டனேட்டர்கள்: மூவர் கைது

கொடைக்கானல் மலைப் பகுதியில் ஜெலட்டின், டெட்டனேட்டர்கள்: மூவர் கைது

ADDED : ஜூலை 02, 2024 06:00 AM


Google News
Latest Tamil News
கொடைக்கானல் : கொடைக்கானல் செம்பிரான்குளம் பகுதியில் கிடந்த ஜெலட்டின் குச்சிகள் , டெட்டனேட்டர்களை வனத்துறையினர் கண்டெடுத்த நிலையில், மூவரை போலீசார் கைது செய்தனர்.

ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட செம்பிரான்குளம் பாண்டியன் பாறை பகுதியில் வனகாப்பாளர்கள் மதுரை வீரன், சிவக்குமார், வேட்டை தடுப்பு காவலர் காமராஜ் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பாண்டியன் பாறை பகுதியில் 15 ஜெலட்டின் குச்சிகள், 23 டெட்டனேட்டர் , 18 என்இடி டெட்டனேட்டர் கிடந்தன. வெடிபொருட்களுடன் கொடைக்கானல் போலீசில் மதுரை வீரன் புகார் அளித்தார்.

இதனை கைப்பற்றிய போலீசார் , மலைப்பகுதியில் தீவிரவாதிகள் , நக்சல் நடமாட்டம் உள்ளதா என திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப், டி.எஸ்.பி., மதுமதி, இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ,நக்சல் ஒழிப்பு போலீசார் ,ஒட்டன்சத்திரம் ரேஞ்சர் ஆறுமுகம் தலைமையிலான வனக்குழுவினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே போலீசார் விசாரணையில் தனியார் எஸ்டேட் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு ரோடு வசதி ஏற்படுத்த சில மாதங்களுக்கு முன் பாறைகள் வெடி வைத்து தகர்ப்பதற்காக இந்த வெடி மருந்து பொருட்கள் பயன்படுத்தியதும், இப்பணியின் போது கம்ப்ரஷர் வாகனம் விபத்துக்குள்ளாக கோவிந்தராஜ் என்பவர் காயமடைந்துள்ளார். இதில் சிதறிய வெடி பொருட்களை மறைவாக வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து இதில் தொடர்புடைய கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த கோவிந்தராஜ் 52, வெடி மருந்துகள் வழங்கிய திண்டுகல்லை சேர்ந்த வேல்முருகன் 52, சரவணன் 27, ஆகியோரை கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப் கூறுகையில், ''செம்பிரான்குளம் பகுதியில் தனியார் ரோடு பணிக்காக இந்த வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இதில் தொடர்புடைய மூவரை கொடைக்கானல் போலீசார் கைது செய்துள்ளனர். மற்றபடி நகசல், தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்து எவ்வித அறிகுறிகளும் இல்லை'' என்றார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பள்ளம் பொய்யாவழி மேட்டில் நக்சல்கள் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டு போது அவர்களை கைது செய்ய வந்த போலீசார், நக்சல்கள் இடையே ஏற்பட்ட மோதலில் நவீன் பிரசாத் சுட்டுக் கொல்லப்பட்டார். அன்று முதல் நக்சல் ஒழிப்பு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தனி குழு செயல்பட்ட நிலையில் இது போன்ற வெடி மருந்து பொருட்கள் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக கொடைக்கானல் மலைப்பகுதியில் இயந்திர பயன்பாடுகள் தடை செய்யப்பட்டும் கம்பரஷர் கொண்டு பாறைகள் வெடி மருந்து வைத்து தகர்க்கப்படும் சம்பவங்கள் நடந்தேறி வருகிறது .இது குறித்து புகார்கள் சென்ற போதும் அதிகாரிகள் நடவடிக்கை இன்றி மெத்தனப் போக்கை கடைபிடிக்கின்றனர். வெடி பொருட்கள் கைப்பற்றிய பகுதியில் நடந்த ரோடு பணி ஜனவரியில் நடந்த நிலையில் வருவாய்த்துறையினர் ,புவியியல் கனிமவளத்துறையினர் கண்டு கொள்ளவில்லை என்பதும் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. தற்போது டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் கிடைத்திருப்பதால் கொடைக்கானலில் சட்ட விரோத செயல்கள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. மாவட்ட நிர்வாகம் கொடைக்கானல் மலைப்பகுதியை தீவிர கண்காணிப்பு வளையத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்ட விரோத செயல்களுக்கு வாய்ப்பு







      Our Apps Available On




      Dinamalar

      Follow us