/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ரோட்டோரம் கொட்டப்படும் குப்பையால் சுற்றுச்சூழலுக்கு பேராபத்து ரோட்டோரம் கொட்டப்படும் குப்பையால் சுற்றுச்சூழலுக்கு பேராபத்து
ரோட்டோரம் கொட்டப்படும் குப்பையால் சுற்றுச்சூழலுக்கு பேராபத்து
ரோட்டோரம் கொட்டப்படும் குப்பையால் சுற்றுச்சூழலுக்கு பேராபத்து
ரோட்டோரம் கொட்டப்படும் குப்பையால் சுற்றுச்சூழலுக்கு பேராபத்து
ADDED : ஜூன் 16, 2024 07:06 AM

மாவட்டத்தில் தேசிய , மாநில நெடுஞ்சாலைகள், கிராம சாலைகள் பல உள்ளன. நகரம் ,கிராமப் பகுதிகளில் சேகரமாகும் குப்பையை கொட்டுவதற்கு பலவித வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்த போதிலும் போகிற போக்கில் ரோடு பகுதிகளில் குப்பையை வீசி செல்வது தொடர் கதையாக உள்ளது.
நள்ளிரவு நேரங்களில் வெளியிடங்களில் இருந்து வந்து குப்பை கழிவுகளை கொட்டி செல்வதும் தொடர்கிறது.
தற்போது குப்பை கழிவுகளுடன், காய்கறி , இறைச்சிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. சாப்பிட்ட பிளாஸ்டிக் இலைகள் ,டம்ளர்கள், பிளாஸ்டிக் பாட்டில்களும் அதிக அளவு கொட்டப்படுகிறது.
இதனால் சுற்றுச் சூழல் பாதிக்கப்பதுடன் சில நாட்களில் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. குப்பையில் வீசப்படும் கழிவுகளை உண்ணவரும் நாய்களும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. வீசப்படும் குப்பை மக்கும் , மக்காத குப்பையாக பிரிக்கப்படாமல் இருப்பதால் பூமிக்கு மாசு ஏற்படுகிறது. பல இடங்களில் குப்பை கழிவுகளை அப்படியே தீ வைத்து எரிப்பதால் உருவாகும் நச்சு புகை சுற்றுச்சூழலை பாதித்து சுவாசக் கோளாறை ஏற்படுத்துகிறது.
ரோடுகளில் வீசப்படும் குப்பை குவியலால் மழை நீர் வடிகாலுக்கு செல்ல வழி இல்லாமல் ஆங்காங்கே தேங்கி சுகாதார கேட்டை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக துாய்மையாக இருக்கவேண்டிய நான்கு வழி சாலை ஓரங்கள் அசுத்தம் நிறைந்ததாக மாறிவிடுகிறது.
இதை தடுக்க ரோடுபகுதியில் குப்பை கொட்டுவதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .