/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/குப்பை குவியலால் பரவும் நோய் தொற்றுகுப்பை குவியலால் பரவும் நோய் தொற்று
குப்பை குவியலால் பரவும் நோய் தொற்று
குப்பை குவியலால் பரவும் நோய் தொற்று
குப்பை குவியலால் பரவும் நோய் தொற்று
ADDED : ஜன 03, 2024 06:41 AM

வாகனங்களை நிறுத்துவதால் நெரிசல்
திண்டுக்கல் மேற்கு ரதவீதி ரோட்டில் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது .பக்தர்கள், பள்ளி மாணவர்கள் வாகனங்கள் அதிகமாக செல்லும் பாதை என்பதால் வாகனங்களை முறையாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜ்குமார், திண்டுக்கல்...........----------நிழற்குடை இருக்கை சேதம்
திண்டுக்கல் சிலுவத்துார் ரோடு ரவுண்ட் ரோட்டில் நிழற்குடையில் இருக்கை சேதத்தால் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .மழை, வெயிலில் ஒதுங்க முடியாமல் வெகு நேரம் காத்திருக்கின்றனர். சீரமைக்கவேண்டும். மாரியம்மாள், ரவுண்ட் ரோடு.
........---------சேதமடைந்த ரோடு
அய்யலுார் அருகே மூக்கர பிள்ளையார் கோயிலில் இருந்து கஸ்பா அய்யலுார் செல்லும் ரோட்டில் ஊராட்சி பகுதிக்குள் இருக்கும் ரோடு சேதமடைந்து போக்குவரத்ததிற்கு சிரமத்தை தருகிறது. சீரமைக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - வையாபுரி, மோர்பட்டி...........----------மின் கம்பத்தில் செடிகள்
திண்டுக்கல் எம்.வி.எம். நகரில் மின் கம்பம் முழுவதும் கொடிகள் படர்ந்து மூடி உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது .அருகே செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர் .மின்கம்பம் முழுவதும் மூடியுள்ள கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.பிரீத்தி, எம்.விம். எம்.நகர்.
...........-----------கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் பின்பகுதியில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பஸ் ஸ்டாண்ட் வரும் பயணிகள் மூக்கை பிடித்து செல்கின்றனர் .சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மணிவண்ணன், திண்டுக்கல்.
...............------------நாய்களால் அச்சம்
திண்டுக்கல் அருகே வேடபட்டியில் சுற்றி திரியும் நாய்களால் பொதுமக்கள் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். நடந்து செல்லும் போது பின்னாடி துரத்துகிறது .தெருக்களில் அதிக அளவில் நாய்கள் சுற்றி திரிகிறது ,இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.முனுசாமி, வேடபட்டி...................-----------மலைபோல் குப்பை
பழநி அடிவாரம் கிழக்கு பாட்டாளி தெரு கார்த்திக் வித்யாமந்திர் பள்ளி அருகே குப்பை கொட்டி மலைபோல் குவித்துள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குப்பை சிதறி கிடப்பதால் கடந்து செல்லும் மாணவர்களுக்கு தொற்றுநோய் அபாயம் உள்ளது . பவித்ரா, பழநி.
..........-----------