/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ காந்திகிராம பல்கலைக்கு A++ தரக்குறியீடு 'நாக்' குழு வழங்கிய அங்கீகாரம் காந்திகிராம பல்கலைக்கு A++ தரக்குறியீடு 'நாக்' குழு வழங்கிய அங்கீகாரம்
காந்திகிராம பல்கலைக்கு A++ தரக்குறியீடு 'நாக்' குழு வழங்கிய அங்கீகாரம்
காந்திகிராம பல்கலைக்கு A++ தரக்குறியீடு 'நாக்' குழு வழங்கிய அங்கீகாரம்
காந்திகிராம பல்கலைக்கு A++ தரக்குறியீடு 'நாக்' குழு வழங்கிய அங்கீகாரம்
ADDED : ஜூன் 30, 2025 03:47 AM
சின்னாளபட்டி : காந்திகிராம பல்கலையில் தர ஆய்வுகள் நடத்திய ''நாக்' குழு, உச்சபட்ச A++ குறியீடு வழங்கியுள்ளது.
இக்குழு(தேசிய தர நிர்ணய குழுமம்), காந்திகிராம பல்கலையில் ஜூன் 16, 17, 18 ஆகிய நாட்களில் ஆய்வு நடத்தியது. நேரடி மற்றும் இணைய வழியாக நடைபெற்ற ஆய்வின்போது, கற்பித்தல், ஆராய்ச்சி, விரிவாக்கம், நிர்வாகம் உள்ளிட்ட 7 பரிமாணங்கள் சார்ந்த அம்சங்கள் மதிப்பீடு செய்யப்பட்டது.
2019 முதல் 2024 வரையான காலத்தில், பல்கலையின் செயல்பாடுகள், சாதனைகள் உள்ளிட்டவை ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன. ஆராய்ந்த குழு, 3.58 (4.0 மொத்தம்)மதிப்பெண்களுடன் உச்சபட்சமாக A++ தர குறியீடு தகுதியை வழங்கியுள்ளது.
துணைவேந்தர் பஞ்சநாதன் கூறுகையில் மத்திய அரசின் நிதியுடன் செயல்பட்டு வரும் இக்கல்வி நிறுவனத்தின் பணியை நாக்குழு மதிப்பீடு செய்து உச்சபெற்ற தரத்தை வழங்கியுள்ளதுஇதன் மூலம் கிராமப்புற மாணவர் மேம்பாடு, கல்வி சேவை உள்ளிட்ட பல்வேறு பரிமாணங்களின் தரம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது, என்றார்.