Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மோசடி அரசு வேலை வாங்கி தருவதாக  படித்தவர்களே ஏமாறுகிறார்கள்

மோசடி அரசு வேலை வாங்கி தருவதாக  படித்தவர்களே ஏமாறுகிறார்கள்

மோசடி அரசு வேலை வாங்கி தருவதாக  படித்தவர்களே ஏமாறுகிறார்கள்

மோசடி அரசு வேலை வாங்கி தருவதாக  படித்தவர்களே ஏமாறுகிறார்கள்

ADDED : செப் 21, 2025 04:41 AM


Google News
Latest Tamil News
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் சமீபகாலமாக ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதில் படித்தவர்களே அதிகம் ஏமாறுகின்றனர் .

தமிழகத்தில் நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. படிப்பறிவு குறைந்த காலகட்டத்தில் மோசடி செய்வதற்கான வழிகளும் மிக குறைந்த அளவிலேயே இருந்தது. ஆனால் தற்போது வளர்ந்துவிட்ட நாகரீகம், தகவல் தொழில்நுட்ப வசதிகள் மூலம் நடைபெறும் குற்றங்கள், மோசடிகள் எண்ணி பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்து விட்டது. இவ்வாறான வளர்ச்சியை பயன்படுத்தி புதுப்புது விதங்களில் மோசடியும் செய்யலாம் என்றவாறு தற்போது நடக்கும் ஆன்லைன் குற்றங்கள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. இதில் பெரும்பாலும் படித்தவர்களே ஏமாறுவது வருத்தத்திற்குரிய விஷயமாக உள்ளது.

அரசுவேலையில் உள்ள போட்டி காரணமாக குறுக்கு வழியில் எளிதாக வேலை பெற சிலர் முயற்சிக்கின்றனர். இதுவே மோசடிக்கு பெரிய இடம் கொடுப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். அரசு துறைகளில் எளிதாக வேலை வாங்கி தரமுடியும் என மோசடி பேர்வழிகள் சொல்லும் போலி வாக்குறுதிகளை நம்பி லட்சக்கணக்கில் பணம் கொடுத்து மக்கள் ஏமாறுகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க வாட்ஸ் அப் வர்த்தகம், ரியல் எஸ்டேட், பண பரிமாற்றம் உள்ளிட்டவைகளிலும் ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தகவல் தொழில்நுட்பத்தின் மீதான நம்பகத்தன்மையை கேள்விகுரியாக்குகிறது. பண ஆசை காட்டியோ ,வர்த்தக ஆசை காட்டியோ, அரசு வேலை ஆசை காட்டியோ வரும் குறுந்தகவல்கள் அணுகும் நபர்களை நம்பாமல் விழிப்புணர்வோடு மக்கள் கவனமாக இருப்பது அவசியமாகிறது.

...............

பணத்தை பிடுங்குகிறார்கள்

மோசடிகள் புதுப்புது விதங்களில் நடக்கிறது. உதாரணமாக அப்ளிகேஷன் மூலமாக பண மோசடி செய்வது, பரிசு விழுந்திருப்பதாக பொய் தகவல் அனுப்புவது, உங்களின் அழகான போட்டோக்களை பார்க்க இங்கே தொட்டுப் பார்க்கவும் என மோசடி நபர்கள் புதுப்புது வழிகளில் பணத்தை பிடுங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.இதை அறியாமல் லட்சக்கணக்கில் பணம் ஏமாந்தவர்களும் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பான விழிப்புணர்வை தீவிரப்படுத்த வேண்டும்.

கார்த்திக் வினோத், மாவட்டத்தலைவர், பா.ஜ.,அரசு தொடர்புத்துறை,திண்டுக்கல்.

...............





      Our Apps Available On




      Dinamalar

      Follow us