/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ காப்பீட்டு திட்ட பெயரில் குக்கிராமங்களில் மோசடி தாராளம்; போலி முகாம்களால் பணத்தை இழக்கும் அப்பாவி மக்கள் காப்பீட்டு திட்ட பெயரில் குக்கிராமங்களில் மோசடி தாராளம்; போலி முகாம்களால் பணத்தை இழக்கும் அப்பாவி மக்கள்
காப்பீட்டு திட்ட பெயரில் குக்கிராமங்களில் மோசடி தாராளம்; போலி முகாம்களால் பணத்தை இழக்கும் அப்பாவி மக்கள்
காப்பீட்டு திட்ட பெயரில் குக்கிராமங்களில் மோசடி தாராளம்; போலி முகாம்களால் பணத்தை இழக்கும் அப்பாவி மக்கள்
காப்பீட்டு திட்ட பெயரில் குக்கிராமங்களில் மோசடி தாராளம்; போலி முகாம்களால் பணத்தை இழக்கும் அப்பாவி மக்கள்
ADDED : ஜூலை 02, 2025 01:31 AM

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் ஏழை மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை, அரசு மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் கட்டணம் இல்லாமல் பெற இத்திட்டம் உதவுகிறது. 2018 செப்டம்பர் முதல் இந்திய அரசின் சுகாதாரத்துறையுடன் இணைந்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஆயிரத்து 27 சிகிச்சை முறைகளுக்கும், 154 தொடர் சிகிச்சை மற்றும் 38 அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் இத்திட்டத்தில் பலன் பெற முடியும். ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கு மிகாமல் உள்ள, அனைத்து குடும்பங்களும் தகுதி பெற வாய்ப்பு அளிக்கப்படுகிறது. குடும்ப தலைவர் காப்பீடு அட்டை பெற்றிருந்தால், ரேஷன் கார்டில் உள்ளவர்களும் இத்திட்டத்தில் சிகிச்சை பெறலாம். தனியார் நிறுவனத்திற்கு, ஒவ்வொரு அட்டைக்கும் தலா ரூ. 10 ஊக்கத்தொகை அரசு வழங்குகிறது.
ஆனால் இதற்கான அட்டை பெறுவதில் அலைக்கழிப்பு ஏமாற்றம் தொடர்பான பிரச்னைகள் நீடிக்கிறது. முதல்வர், பிரதமர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு முகாம் என்ற பெயரில், பரவலாக போலி முகாம்கள் நடத்தப்படுகிறது. இதற்காக சம்பந்தப்பட்ட பகுதிக்கேற்ப விருப்பம் போல் கட்டண வசூலும் நடந்தது.
இது தவிர திண்டுக்கல் மட்டுமின்றி வெளி மாவட்ட தனியார் மருத்துவமனைகள் சார்பில், இத்திட்ட பெயரைக்கூறி, கண், சர்க்கரை, இதயம், முக சீரமைப்பு, மூட்டு மாற்று உள்ளிட்ட துறைகளின் பெயரில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துகின்றனர். உரிய அனுமதியின்றி நடத்தப்படும் சூழலில், வீரக்கல் கிராமத்தில் ஒருவர் பலியான சம்பவமும் நடந்தது. ஏமாற்று நடவடிக்கைகள், அசம்பாவிதங்களால், அப்பாவிகள் பலியாகும் அவலங்களும் வாடிக்கையாகிவிட்டது.
மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், இது போன்ற பிரச்னைகளை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.