ADDED : ஜூன் 12, 2025 02:34 AM
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் நவீன மயமாக்கும் பணி, கைராசி நகர் பகுதியில் பூங்கா அமைக்கும் பணிக்கு சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் துணை முதலமைச்சர் உதயநிதி அடிக்கல் நாட்டினார்.
இதை தொடர்ந்து நடந்த பூமி பூஜையில் டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, பழனி ஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார் சஞ்சய் காந்தி, நகராட்சி தலைவர் திருமலைசாமி, கமிஷனர் ஸ்வேதா, பொறியாளர் சுப்பிரமணிய பிரபு, மேலாளர் ரவி, சுகாதார ஆய்வாளர் ராஜ் மோகன், கணக்காளர் சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாலு கலந்து கொண்டனர்.