/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ திண்டுக்கல் மாவட்ட பா.ஜ., முன்னாள் தலைவர் கைது திண்டுக்கல் மாவட்ட பா.ஜ., முன்னாள் தலைவர் கைது
திண்டுக்கல் மாவட்ட பா.ஜ., முன்னாள் தலைவர் கைது
திண்டுக்கல் மாவட்ட பா.ஜ., முன்னாள் தலைவர் கைது
திண்டுக்கல் மாவட்ட பா.ஜ., முன்னாள் தலைவர் கைது
ADDED : மார் 23, 2025 11:54 PM

பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநியில் அவதுாறாக பேசிய பா.ஜ., மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர் கனகராஜை போலீசார் கைது செய்தனர்.
பழநி பெரியப்பாநகரைச் சேர்ந்த பா.ஜ., மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர் கனகராஜ். இவர் சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவரை கடுமையாக பேசிய ஆடியோ ஒன்று வைரலானது. இதில் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த எல்லைதுரை மனைவி குறித்து கனகராஜ், அவதுாறாக பேசிய வார்த்தைகள் இடம்பெற்றிருந்தது. இதையறிந்த எல்லைதுரையின் மனைவி புவனேஸ்வரி, பழநி தாலுகா போலீசில் புகார் அளித்தார். பெண்ணை மானபங்கம் செய்யும் வகையில் அவதுாறாக பேசுவது, கொலை மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து கனகராஜை கைது செய்தனர்.
நேற்று விசாரணைக்காக கனகராஜை தாலுகா ஸ்டேஷனுக்கு போலீசார் அழைத்து வந்தபோது பா.ஜ.,வினர் திரண்டனர். இதனால் போலீஸ் ஸ்டேஷன் கதவுகள் அடைக்கப்பட்டு யாரும் அனுமதிக்கப்படவில்லை.