ADDED : மே 13, 2025 05:38 AM

பட்டிவீரன்பட்டி : பட்டிவீரன்பட்டி மான் மலையில் நேற்று மாலையில் திடீரென காட்டுத் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. அதன் பின்பு படிப்படியாக மலை முழுவதும் பற்றி எரிந்து வருகிறது.
இந்த மலை பகுதியின் அடிவாரத்தில் 500 மீட்டர் தொலைவில் குடியிருப்பு உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வத்தலக்குண்டு வனத்துறை, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது : சமூக விரோதிகள் தீ வைத்து உள்ளனர். அதிக வெப்பம் காரணமாக தீ வேகமாக பரவி வருகிறது. இப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றனர்.