/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வார்டு ரவுண்ட் அப் பகுதிக்காக... சேதமான சாக்கடை; சரி இல்லாத ரோடு;பழநி 32 வது வார்டு மக்கள் அவதி வார்டு ரவுண்ட் அப் பகுதிக்காக... சேதமான சாக்கடை; சரி இல்லாத ரோடு;பழநி 32 வது வார்டு மக்கள் அவதி
வார்டு ரவுண்ட் அப் பகுதிக்காக... சேதமான சாக்கடை; சரி இல்லாத ரோடு;பழநி 32 வது வார்டு மக்கள் அவதி
வார்டு ரவுண்ட் அப் பகுதிக்காக... சேதமான சாக்கடை; சரி இல்லாத ரோடு;பழநி 32 வது வார்டு மக்கள் அவதி
வார்டு ரவுண்ட் அப் பகுதிக்காக... சேதமான சாக்கடை; சரி இல்லாத ரோடு;பழநி 32 வது வார்டு மக்கள் அவதி
ADDED : ஜூன் 19, 2025 03:01 AM

பழநி: சேதமான சாக்கடை, சரி இல்லாத ரோடு என பழநி நகராட்சி 32 வது வார்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.
அடிவாரம், தில்லையாடி வள்ளியம்மை தெரு, ஆண்டவன் பூங்கா ரோடு, போகர் தெரு, அம்பேத்கர் தெரு பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் குடிநீர் குழாய் முழுமையாக அமைக்க வில்லை. தெருநாய் தொல்லை அதிக அளவில் உள்ளது. மழை காலங்களில் மழை நீர் சாக்கடை நீரிடன் கலந்து பூங்கா ரோடு வழியாக செல்கிறது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. தண்ணீர் தொட்டி அமைக்க மேடைகள் அமைக்கப்பட்டும் தொட்டிகள் பொருத்தப்படவில்லை.
.....
வசதிகள் இல்லை
சிவசங்கர், ஆட்டோ டிரைவர் : எங்கள் பகுதியில் சந்து பகுதிகள் அதிகம் உள்ளன. இங்கு சாலைகள் சரியாக இல்லை. இதனால் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. பக்தர்கள் ஆண்டவன் பூங்கா ரோடை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும்.
.............
தேவை போலீஸ் ரோந்து
பாண்டியன், வியாபாரி : அம்பேத்கார் தெரு, தில்லையாடி வள்ளியம்மை தெருவில் சாக்கடை சேதமடைந்துள்ளது. வெளி நபர்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளதால் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும்.இதோடு இங்கு போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும்.
........
சீரமைக்க நடவடிக்கை
முருகேஸ்வரி , கவுன்சிலர் (தி.மு.க.,) : சேதமடைந்த சாக்கடை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கண்காணிப்பு கேமரா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் .குடிநீர் திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும். தெரு நாய் தொல்லை தீர நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் .குப்பை முறையாக அகற்றப்படுகின்றன என்றார்.