/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் விழாவில் பூ பல்லக்கு கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் விழாவில் பூ பல்லக்கு
கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் விழாவில் பூ பல்லக்கு
கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் விழாவில் பூ பல்லக்கு
கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் விழாவில் பூ பல்லக்கு
ADDED : ஜூன் 11, 2025 01:03 AM

நத்தம் : கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் திருவிழாவில் நடந்த பூ பல்லக்கில் கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மன் நகர்வலம் வர திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இக் கோயில் வைகாசி திருவிழா மே 31-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடந்த விழாவில் தினமும் சுவாமி புறப்பாடு நடந்தது. ஜூன் 7-ல் கைலாசநாதர் - சமேத செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாணம், 8-ம் தேதி திருத்தேரோட்டம் நடந்தது. நேற்று இரவு பல்வேறு வண்ண பூக்களால் அலங்கரிக்கபட்ட பூப்பால்லக்கில் கைலாசநாதர் -செண்பகவல்லி அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி நகர் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.