ADDED : மே 30, 2025 03:43 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த முள்ளிப்பாடியில் இருந்து ஏ.வெள்ளோடு வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரிங்ரோடு அமைகிறது.
இதற்காக 7 கிராமங்களை சேர்ந்த விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. சந்தை மதிப்பைவிட 3 மடங்கு உயர்த்தி தருவதாக கூறியது போல் இழப்பீடு வழங்கவில்லை நெடுஞ்சாலைத்துறையினர், விவசாயிகளிடம் 3 முறை பேச்சு நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை .
4-வது முறையாக திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் நேற்று கூட்டம் நடந்தது. புறக்கணித்த விவசாயிகள் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார். தலைவர் பெருமாள் முன்னிலை வகித்தார்.
விவசாயிகளிடம் டி.ஆர்.ஓ., (நில எடுப்பு பிரிவு) வீராசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். மனு கொடுங்கள். தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூற போராட்டத்தை கைவிட்டனர்.