/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/காய்கறிகள் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சிகாய்கறிகள் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
காய்கறிகள் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
காய்கறிகள் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
காய்கறிகள் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜன 13, 2024 04:32 AM

ஒட்டன்சத்திரம்,; பொங்கலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வியாபாரிகள் அதிகமாக காய்கறிகளை வாங்கியதால் விலை அதிகரித்து காணப்பட்டது.
ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சி அம்மாபட்டி காந்தி காய்கறி மார்க்கெட்டில் பொங்கலை முன்னிட்டு வியாபாரிகள் அதிக அளவில் காய்கறிகளை கொள்முதல் செய்தனர்.
இதன் காரணமாக வெண்டை, கொத்தவரை, முருங்கை, பூசணிக்காய் உள்ளிட்ட பல காய்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.
கிலோ ரூ 80க்கு விற்ற முருங்கை ரூ.120 , ரூ 10 க்கு விற்ற பூசணிக்காய் ரூ.20, ரூ.27க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.45 , ரூ.25க்கு விற்ற கொத்தவரைங்காய் ரூ.65க்கு விற்பனையானது. காய்கறிகள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மார்க்கெட் சங்க செயலாளர் ராசியப்பன் கூறுகையில், பொங்கலை முன்னிட்டு வியாபாரிகள் அதிகமாக காய்கறிகளை கொள்முதல் செய்ததால் விலை அதிகரித்துள்ளது என்றார்.