ADDED : ஜூன் 21, 2025 12:33 AM
எரியோடு: கோவிலுார் தோகமலை கோட்டையை சேர்ந்த விவசாய தம்பதி தங்கராஜ் 41,வரலட்சுமி 38. இவர்களுக்கு திருமணமாகி 16 ஆண்டுகளாகியும் குழந்தைகள் இல்லை.
இதற்கிடையில் விபத்தில் சிக்கிய தங்கராஜிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவதிப்பட்டார். விரக்தியான வரலட்சுமி மே 20ல் விஷம் குடித்து தற்கொலை செய்தார். மனைவி இறந்த துக்கத்தில் தங்கராஜூம் நேற்றுமுன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்தார். எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.