ADDED : பிப் 25, 2024 05:59 AM
வடமதுரை : பாடியூரை சேர்ந்தவர் ராமாயி 34.
செங்குறிச்சி தபால் நிலையத்தில் பகுதி நேர ஊழியராக பணிபுரிந்தார். உறவினரான பெங்களூர் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் சந்திரசேகர் 39, வங்கி உயரதிகாரிகளை தெரியும் அவர்கள் மூலம் பெரும் தொகை கடனாக கிடைக்க செய்வதாக கூறி ராமாயியிடம் ரூ.10.14 லட்சம் வரை பணம் பெற்றார். ஏமாற்றப்படுவதை தெரிந்து ராமாயி போலீசில் புகார் செய்தார். ரூ.3 லட்சம் கிடைத்த நிலையில் மீதத் தொகையை தரவில்லை. நீதிமன்ற உத்தரவுபடி வடமதுரை போலீசார் சந்திரசேகரை தேடுகின்றனர்.