Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஒட்டன்சத்திரத்தில் வெடி சத்தம்: மக்கள் அச்சம்

ஒட்டன்சத்திரத்தில் வெடி சத்தம்: மக்கள் அச்சம்

ஒட்டன்சத்திரத்தில் வெடி சத்தம்: மக்கள் அச்சம்

ஒட்டன்சத்திரத்தில் வெடி சத்தம்: மக்கள் அச்சம்

ADDED : ஜன 31, 2024 06:44 AM


Google News
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் பகுதியில் அடுத்தடுத்த இரண்டு முறை பயங்கரமான வெடிசத்தம் கேட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

ஒட்டன்சத்திரம், அத்திக்கோம்பை, வெரியப்பூர், அப்பியம்பட்டி நால்ரோடு சுற்று பகுதிகளில் நேற்று மதியம் 3:10 மணிக்கு தொடர்ந்து 2 முறை பயங்கர வெடிசத்தம் கேட்டது.

எதனால் வெடிசத்தம் ஏற்பட்டது என்பது தெரியாது பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இதேபோல் 2022 மார்ச் 25 ல் ஒட்டன்சத்திரம் அருகே கே.கீரனுார் கிராமத்தில் அதிகாலை 2:40 மணி முதல் வெடிசத்தம் தொடர்ந்து கேட்க வீட்டில் இருந்த ஓடுகள் இடிந்து பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us