/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பெயரளவில் 4 வழிச்சாலை விரிவாக்கப்பணி ஆக்கிரமிப்புகள், நெரிசலில் சிக்கி தவிக்கும் செம்பட்டி பெயரளவில் 4 வழிச்சாலை விரிவாக்கப்பணி ஆக்கிரமிப்புகள், நெரிசலில் சிக்கி தவிக்கும் செம்பட்டி
பெயரளவில் 4 வழிச்சாலை விரிவாக்கப்பணி ஆக்கிரமிப்புகள், நெரிசலில் சிக்கி தவிக்கும் செம்பட்டி
பெயரளவில் 4 வழிச்சாலை விரிவாக்கப்பணி ஆக்கிரமிப்புகள், நெரிசலில் சிக்கி தவிக்கும் செம்பட்டி
பெயரளவில் 4 வழிச்சாலை விரிவாக்கப்பணி ஆக்கிரமிப்புகள், நெரிசலில் சிக்கி தவிக்கும் செம்பட்டி

பணிகளில் பாரபட்சம்
4 வழிச்சாலை விரிவாக்கத்திலும் பெயரளவில் மட்டுமே பணிகள் நடந்தது. ரவுண்டானா முதல் ரோட்டின் 4 புறங்களிலும் விரிவுபடுத்தலில் அதிகாரிகள் அலட்சியம் காட்டினர். அரசியல், செல்வாக்கு காரணமாக 2 கிலோமீட்டர் துாரத்திற்கு விரிவாக்க பணிகளில் பாரபட்சமாக இருந்தது. ரோட்டின் பெரும் பகுதிகளில் கடைகளுக்கான பொருட்களை திறந்தவெளியில் வைத்துள்ளனர். குடியிருப்புகளுக்கான நீட்டிப்பு அறைகள் என ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கனரக வாகனங்கள் கடந்து செல்ல முடியாத அவலநிலைக்கு, ரோடு விரிவாக்கத்திற்கு பின்பும் தீர்வு கிடைக்காமல் நெரிசல் மட்டுமே அதிகரித்து வருகிறது.
காத்திருக்கும் நிலை
வார விடுமுறை நாட்கள், தினமும் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை நீடிக்கிறது. போலீசாரும் பாராமுகமாக இருப்பதால் வெளியூர் வாகன ஓட்டிகள், அவசர கால ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன. இதன் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.