/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சாலை அமைப்பதில் ஆக்கிரமிப்பாளர்களால் இடையூறு சாலை அமைப்பதில் ஆக்கிரமிப்பாளர்களால் இடையூறு
சாலை அமைப்பதில் ஆக்கிரமிப்பாளர்களால் இடையூறு
சாலை அமைப்பதில் ஆக்கிரமிப்பாளர்களால் இடையூறு
சாலை அமைப்பதில் ஆக்கிரமிப்பாளர்களால் இடையூறு

கொசுத்தொல்லை
திருமூர்த்தி, வியாபாரி : வார்டு முக்கிய சாலைகளில் சாக்கடை சேதமடைந்து உள்ளது. கொசுத்தொல்லையும் அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு நோய் தொற்றுக்கு ஆளாகும் நிலையில் வார்டு மக்கள் உள்ளனர்.
தேவையாகுது கேமரா
சங்கிலி,சாலையோர வியாபாரி : தெரு நாய் தொல்லை அதிகளவில் உள்ளது .இதனை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை .இதனால் குழந்தைகள், பெரியவர்கள், பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். வெளிநபர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா பொருத்த வேண்டும்.
அனைத்து நாளிலும் ரேஷன்
ராமாத்தாள்,குடும்பத் தலைவி : பாதாள சாக்கடை திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும். ரேஷன் கடைகளில் மாத இறுதி நாட்களில் பொருட்கள் இல்லாமல் அவற்றை வாங்க சிரமம் ஏற்படுகிறது. அனைத்து நாட்களிலும் ரேஷன் கடைகளில் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அகற்ற நடவடிக்கை
நடராஜன், கவுன்சிலர்(அ.திமு.க.,) :பாதாள சாக்கடை திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. கொசு மருந்து அடிக்கடி அடிக்கப்படுகிறது. நாய் தொல்லையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ரோட்டில் இருந்து இடும்பன் கோயில் செல்லும் ரோடு பகுதியில் சாக்கடை பாலம் , சாலை அமைக்கப்படும். வெளி நபர்கள் கூடாரம் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.