ADDED : அக் 21, 2025 03:55 AM
வடமதுரை: சட்டசபை தேர்தல் இன்னும் 6 மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கு முந்தைய தீபாவளி என்பதால் தி.மு.க., வினர் வாக்காளர் கவனிப்பில் அதிக அக்கறையுடன் செயல்பட்டனர்.
வடமதுரை பேரூராட்சி பகுதியில் தி.மு.க., சார்பில் 15 வார்டுகளிலும் இருக்கும் ரேஷன் கார்டுகளை கணக்கிட்டு இனிப்பு பெட்டிகள் தயார் செய்யப்பட்டு கட்சியினர் மூலம் நேற்று காலை வரை வினியோகம் நடந்தது. கடந்த சில தீபாவளிகளாக அ.தி.மு.க., சார்பில் அக்கட்சி நிர்வாகிகளுக்கான தீபாவளி கவனிப்பு ஏதும் நடக்காததால், அ.தி.மு.க.,வை சேர்ந்த பலருக்கும் தி.மு.க., சார்பில் ரகசியமாக கவனிப்பு படலம் நடந்தது.


