/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/தாடிக்கொம்பு பெருமாள் கோயிலில் துலாபாரம்தாடிக்கொம்பு பெருமாள் கோயிலில் துலாபாரம்
தாடிக்கொம்பு பெருமாள் கோயிலில் துலாபாரம்
தாடிக்கொம்பு பெருமாள் கோயிலில் துலாபாரம்
தாடிக்கொம்பு பெருமாள் கோயிலில் துலாபாரம்
ADDED : ஜன 11, 2024 03:55 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் 12 அடி உயரமுள்ள ஸ்ரீ வாரி துலாபாரம் அமைக்கப்பட்டது.
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் பிரசித்திபெற்ற கோயிலான சவுந்திரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் தேய்பிறை அஷ்டமி அன்று சொர்ணா ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் நேற்று கொடி கம்பம் அருகே 12 உயரத்தில் துலாபாரம் அமைக்கப்பட்டது. துலாபாரத்திற்கு கோயில் பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து பூக்கள் துாவி மாலை அணிவித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலைப்போல் உயரமான துலாபாரம் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக எடைக்கு எடை கற்கண்டு, வெள்ளம், வாழைப்பழம், திராட்சைப்பழம், பேரீச்சைப்பழம்,ஏலக்காய், பச்சரிசி, சில்லரை, நாணயங்கள் நவதானியங்கள் ஆகியவற்றை பெருமாளுக்கு துலாபாரம் மூலம் வழங்கலாம் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் விக்னேஷ் பாலாஜி,உறுப்பினர்கள் வாசுதேவன், பிரபாகரன், சுசீலா ராமானுஜம், செயல் அலுவலர் முருகன், பட்டாச்சாரியார் ராமமூர்த்தி, ரமேஷ் செய்தனர்.