ADDED : ஜன 19, 2024 05:36 AM
எரியோடு: திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே வேலாம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்புசாமி 48.
இவர் சொந்தமாக சரக்கு மினி வேன் வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார். அவரது உறவினர்களுக்குள் பூர்வீக சொத்துகளை பிரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று இரவு நடந்தது. அப்போது ஏற்பட்ட தகராறில் கருப்புசாமி கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.


