ADDED : ஜன 25, 2024 05:46 AM
சித்தையன்கோட்டை: சித்தையன்கோட்டை பெரிய பள்ளிவாசலுக்கு சொந்தமான இடம் ரேஷன் கடைக்காக தானம் வழங்கப்பட்டது.
சித்தையன்கோட்டை மூலக்கடை தெரு பகுதி ரேஷன் கடை கட்டடம் சேதமடைந்த நிலையில், ரேஷன் பொருட்கள் வாங்குவதில் சிரமம் நிலவுவதாக சித்தையன்கோட்டை பெரிய பள்ளிவாசல்முத்தவல்லிகள் உதுமான் அலி, ஷேக்தாவூத், தி.மு.க., மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு நிர்வாகி மரைக்காயர்தலைமையிலான குழுவினர் அமைச்சர்ஐ.பெரியசாமியிடம் முறையிட்டனர்.
புதிய ரேஷன் கடைக்கான இடத்தை தேர்வு செய்வதற்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் பெரிய பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் 600 சதுர அடி இடத்தை ரேஷன் கடை கட்டுவதற்காக சித்தையன்கோட்டை பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் தானமாக வழங்கினர். இதற்கான பத்திரத்தை அமைச்சர் பெரியசாமியிடம் கொடுத்தனர். சம்பந்தப்பட்ட இடத்தில் ரேஷன் கடை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். பேரூராட்சித் தலைவர் போதும்பொண்ணு, துணைத்தலைவர் ஜாகிர்உசேன், வார்டு கவுன்சிலர் பவிதாபானு உடனிருந்தனர்.