/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தொடர்ந்து ஏமாற்றும் தி.மு.க., அரசு தொடர்ந்து ஏமாற்றும் தி.மு.க., அரசு
தொடர்ந்து ஏமாற்றும் தி.மு.க., அரசு
தொடர்ந்து ஏமாற்றும் தி.மு.க., அரசு
தொடர்ந்து ஏமாற்றும் தி.மு.க., அரசு
ADDED : மார் 23, 2025 01:46 AM
திண்டுக்கல்: ''குழு அமைப்பது, சரண் விடுப்பு தொகை அடுத்தாண்டு தருவது போன்றவற்றின் வாயிலாகஆசிரியர்கள், அரசு ஊழியர்களை தொடர்ந்து ஏமாற்றும் நடவடிக்கையில் தி.மு.க., அரசு ஈடுபட்டு வருகிறது'' என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலரும், ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளருமான மயில் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 7வது மாநில மாநாடு திண்டுக்கல்லில் மே மாதம் நடக்கிறது. அரசுப்பள்ளிகளை பாதுகாப்போம், தேசிய கல்விக்கொள்கையை நிராகரிப்போம், ஹிந்தி திணிப்பை எதிர்ப்போம், பறிக்கப்பட்ட வாழ்வாதார உரிமைகளை மீட்டெடுப்போம் என்கிற கொள்கை முழக்கத்துடன் மாநாடு நடக்க உள்ளது. 20 ஆயிரத்திற்கு அதிகமான ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். பேரணியும் நடக்கிறது.
தி.மு.க., தேர்தலின் போது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு காலதாமதம் செய்வதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த குழுவை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவோம் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தனர். அதைப்பற்றி எந்தவித சிந்தனையும் இந்த அரசுக்கு இல்லை.
4 ஆண்டுகாலத்தில் தி.மு.க., அரசின் மீதான நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. 2026 தேர்தலில் அதே வாக்குறுதியை அளித்தால் நாங்கள் ஏற்று கொள்ள மாட்டோம். தேர்தலில் எதிரொலிக்கும்.
அரசு நம்மை ஏமாற்றி விட்டது என்பதை உணர்த்துவதற்காக ஜாக்டோ-ஜியோ இன்று மாநிலம் முழுவதும் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துகிறது. சரண் விடுப்பு தொகை 2025லே வழங்கியிருந்தால் வரவேற்றிருப்போம். தொடர்ந்து ஏமாற்றும் நடவடிக்கையில் தி.மு.க., அரசு ஈடுபட்டு வருகிறது என்றார்.