ADDED : செப் 16, 2025 04:51 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள்விழாவை தி.மு.க., அ.தி.மு.க., சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே உள்ள அண்ணாதுரை சிலைக்கு தி.மு.க.,சார்பில் அமைச்சர் பெரியசாமி தலைமையில் கட்சியினர் மரியாதை செலுத்தினர். எம்.எல்.ஏ., செந்தில்குமார், மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர்கள் வெள்ளிமலை, நெடுஞ்செழியன், மாநகர பொருளாளர் சரவணன், விவசாய அணி அமைப்பாளர் கண்ணன், இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம் கலந்துகொண்டனர்.